பஞ்சாபில் அகில இந்திய ஆக்கிபோட்டி: மனோன்மணியம் பல்கலைக்கழக அணி பங்கேற்கிறது
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் அமைந்துள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம் சார்பாக நடக்க உள்ளது.இப் போட்டியில் இந்தியாவிலுள்ள தலைசிறந்த 16 பல்கலைக்கழகங்கள் அணிகள் விளையாட உள்ளன.
தென்மண்டல போட்டியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணி முதல் இடம் பெற்று அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணி பயிற்சி முகாம் நிறைவடைந்து. அகில இந்திய போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக உடற் கல்வி இயக்குனர் முனைவர் ஆறுமுகம் தலைமையில் வீரர்களுக்கு சீருடை வழங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்.
அணியின் மேலாளராக கடையநல்லூர் அரசு கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி, அணியின் பயிற்சியாளர் முத்துக்குமார், அணியின் தலைவர் சண்முகம் மற்றும் அனைத்து வீரர்களையும் பாராட்டி வழி அனுப்பி வைத்தார். விழாவில் கே.ஆர். கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராம்குமார், திருநெல்வேலி எம்.டி,.டி. இந்து கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கந்தசாமி, புளியங்குடி மனோ கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குமரேச ஸ்ரீனிவாசன், நாகலாபுரம் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின் அதிசயராஜ் கோவில்பட்டி ,எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி உடற் கல்வி இயக்குனர் சந்திரன் வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.







