“தூத்துக்குடி மாநகர்- புறநகர்” ; அ.ம.மு.க. மாற்றி அமைப்பு
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வருகிறது. தற்போதுநிர்வாக வசதிக்காக “தூத்துக்குடி மாநகர்” மற்றும் “தூத்துக்குடி புறநகர்” என இரண்டு மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளை கீழ்காணுமாறு உள்ளடக்கி செயல்படும்.
தூத்துக்குடி மாநகர் மாவட்டம்:- 1. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, 2. விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி, 3. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, தூத்துக்குடி புறநகர் மாவட்டம்:- 1. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி, 2. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி, 3. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராக விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக செயலாளர்) தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளராக பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ் (கழக மாணவர் அணி இணைச்செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
இதுவரை மாணவர் அணி இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும்,தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் சிவபெருமாள், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பிலிருக்கும் மனோகரன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.
இவ்வாறு தினகரன் கூறி உள்ளார்.







