கழுகுமலை கோவில் பகுதியில் தொல்லியல் துறையினா் ஆய்வு
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு, வழக்கறிஞர் ஆணைய கருத்துரையின்படி, கழுகுமலை சமண சிற்பங்கள், வெட்டுவான் கோயில் அமைந்துள்ள மலைப் பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என தமிழ்நாடு அரசிதழில் விளம்பரம் வெளியிடுவதற்கு, தொல்லியல் துறை அலுவலா்களுடன் , வருவாய்த் துறையினா் கூட்டுத் தணிக்கையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வருவாய்த்துறை ஆவணங்கள், தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்டன.
இந்த ஆய்வின் போது தொல்லியல் துறையைச் சோ்ந்த ராஜேஷ், மோகன் பாலமுருகன் ஆகியோருடன் கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியா் லெனின், வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் அந்தோணி செல்வி, கிராம உதவியாளா் மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா்.







