மாநில கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி வீராங்கனை
தூத்துக்குடி விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவி முறையாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். மேலும் மாவட்ட அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். கராத்தே வீராங்கனை வைஷ்ணவி அண்மையில் ஊட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி இருந்தும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டணத் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியின் உதவியை நாடினர்.
மாணவி வைஷ்ணவிக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கான உபகரணங்கள் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவின தொகையை டாக்டர் எஸ் ஜே கென்னடி வழங்கினார். இந்த உதவியை பெற்ற கராத்தே வீராங்கனை எஸ். வைஷ்ணவி மற்றும் சகோதரி எஸ் மேனகா ஆகியோர் ஊட்டியில் நடைபெற்ற. கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கராத்தே வீராங்கனை எஸ்.வைஷ்ணவி மாநில அளவில் முதல் பரிசையும் அவரது சகோதரி மேனகா மூன்றாவது பரிசையும் பெற்றனர். தூத்துக்குடி திரும்பிய 2 பேரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியை சந்தித்து வெற்றி கோப்பையையும், சான்றிதழையும் காட்டி வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, கராத்தே வீராங்கனைகளின் தந்தை சடகோபன் , டிராகன் கராத்தே பயிற்சி பள்ளி மாஸ்டர் விஜயசேகர், சமூக ஆர்வலர் கல்விளை ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.







