அப்பனேரி ஊராட்சியில் வரியினங்கள் கணினிமயம்
கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சிக்கு 2023-2024 ம் ஆண்டிற்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டு வாி, தொழில் வாி, தொழில் உாிமக் கட்டணம் ஆகிய வாியினங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டுவாி ரசீதில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் பெயா் , தெருவின் பெயர் தொலைபேசி எண் போன்ற விபரங்கள் சரியாக உள்ளதா? என சாி பார்த்து வீட்டு வரி ரசீது ஆன்லைனில் செலுத்த தெரிவிக்கப்படுகிறது.
திருத்தம் இருப்பின் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த திருத்தம் ஜனவாி 31ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (ஏற்கனவே வீட்டு வாி செலுத்தியவா்களுக்கு தேவை இல்லை புதிதாக செலுத்தும் நபா்கள் பெயாில் திருத்தம் இருப்பின் வீட்டு வாி செலுத்துவதற்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருத்தம் செய்த பிறகு வீட்டு வாி செலுத்துமாறு)
வீட்டு வாி கணினி மயமாக்கப்பட்டதால் வீடுகள் தோரும் சென்று வாி வசூலிக்க இயலாத நிலை உள்ளது . எனவே வீட்டு வாி செலுத்தாத நபா்கள் உடனடியாக செலுத்தவும். வாி செலுத்தாத வீடுகளுக்கு அபராத தொகையுடன் வீட்டு வாி செலுத்த நோிடும் என்பதை தொிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.







