தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா? கனிமொழி திடுக்கிடும் தகவல்
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு கூட்டம் இன்று தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை தாங்கி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருத்தை யார் வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம் தவறு இல்லை, அது எவ்வளவு காட்டமாக கருத்தாக இருந்தாலும் முன்வைக்கலாம். அது அரசியலில் ஒரு சாதாரண விஷயம். அடிப்படை நாகரிகம் தாண்டி செல்லக்கூடாது என்பதைத்தான் நான் நினைக்கிறேன். மேலும், டெல்லியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும், திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும்” என்று கூறினார்.







