திமுக இளைஞர் அணி மாநாடு : சென்னையில் இருந்து கொண்டு சென்ற சுடர், மு. க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் – அண்ணா – karunaanithîî திருவுருவச்சிலைகளுக்கு அருகே இரண்டு தினங்கள் முன்பு, இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டை யொட்டி ஓட்டம் தொடங்கி வைக்கப்ப ட்ட்து.
செங்கல்பட்டு – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக அந்தச் சுடர் நேற்று சேலம் மாநாட்டுத் திடலுக்கு வந்து சேர்ந்தது.
இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்கள் அதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க, அச்சுடரை கழகத் தலைவர் மு. க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த சுடர்,மாநாட்டு வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
இருசக்கர வாகன பேரணி


கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே இருந்து திமுக வை சேர்ந்த 100 பேர் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணிப் புறப்பட்டது.
அந்தப்பேரணி 1000 இருசக்கரவாகனங்களாகப் பெருகி மாநாட்டுத் திடலை வந்தடைந்தது.
மாநாட்டுத் திடலில் இருசக்கர வாகன வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திமுக தலைவர் – முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.







