கோவில்பட்டியில் சிறப்பு கடன் முகாம்; 250 பேர் விண்ணப்பித்தனர்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுகழகம் ஆகியவை இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் முகாமை கோவில்பட்டியில் நடத்தின.
முகாமுக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஸ்வர்ணலதா தலைமை தாங்கினார்.தொழில் முதலீட்டு கழக பொது மேலாளர் துரைராஜ், மண்டல மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் வர்த்தக சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பரமசிவம், சுரேஷ், ராஜவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் தொழில் முதலீட்டு கழக அதிகாரிகளிடம் கடன் கேட்டு 120 பேர் விண்ணப்பம் அளித்தனர். மாவட்ட தொழில் மையத்திடம் மானியத்துடன் கடன் கேட்டு 130 பேர் விண்ணப்பம் அளித்தனர்.

முகாமில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஸ்வர்ணலதா பேசியதாவது:-‘
தொழில் முதலீட்டு கழகம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில்மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிருவனங்கக்ளுக்கு ரூ.3 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடன் தொகையை 6 சதவீத வட்டியுடன் 18 மாதங்களில் திரும்ப செலுத்த வேண்டும்.
தொழில் மையத்தின் மூலம் பல்வேறு கடன் திட்டங்களில் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு 9 முதல் 15 சதவீத வட்டி வசூலிக்கப்படும். 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
கடனை திரும்ப செலுத்த 3 முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். முகாமில் கொடுக்க்ப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஸ்வர்ணலதா பேசினார்.







