பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 பரிசு ; மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூ.1௦௦௦ மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்ககப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டை டி.யு.சி.எஸ். நியாயவிலைக்கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி,மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால், நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ஹர்ஷகாய் மீனா . கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.







