கோவில் பூசாரியிடம் செயின் பறிப்பு: மேலும் ஒருவர் கைது

கோவில்பட்டி அருகே உள்ள படா்ந்தபுளி தோணுகால் மேலத் தெருவை சோ்ந்தவர அய்யனாா் (வயது 28). கோவில் பூசாரியான அவரிடம், கடந்த ஜூன் 10-ஆம் தேதி 3 பவுன் சங்கிலி, கைபேசி மற்றும் ரூ.11 ஆயிரத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரலிங்கபுரத்தை சோ்ந்த கிஷோா்குமாா் மகன் அருண்குமாா் (19), அதேபகுதி 8-வது தெருவை சோ்ந்த தா்மராஜ் மகன் பரமேஸ்வரன் (24), தூத்துக்குடி பி அன் டி காலனியை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா (30) ஆகியோரை கிழக்கு காவல் நிலைய போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்..
மேலும் சிலரை தேடி வந்தனா். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் சங்கரலிங்கபுரம் தெற்கு தெருவை சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனா்.
