• May 9, 2024

அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதி ; மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

 அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதி ; மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு நிறுவையில் உள்ளது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்க கூடாது. பழையன கழிந்தால் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கட்டும். பன்னீர்செல்வம் அணியை மட்டுமின்றி அந்த அணிக்குப்போனவர்களையும் மீண்டும் இணைக்ககூடாது என கூறினார்.

நத்தம் விஸ்வநாதன் பேசும் போது பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம்; அரசியலில் போலி ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றார்,

சட்டசபை தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயார் என அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வாக்குசாவடி அளவில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த வேண்டும்.

ஓபிஎஸ் பண்த்தை கொடுத்து கூட்டத்தை கூட்டி உள்ளார்.தி.மு.க.வின் பி டீமாக ஓ.பி..எஸ் செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்து கொள்ளும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அ.தி.மு.க முடிவு செய்யும். அ.தி.மு.க தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம்.

அ.தி.மு.க.வை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என எப்போதும் பா.ஜ.க. வற்புறுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *