• May 20, 2024

கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு பாலத்தை அகற்றக்கோரி மீட்பு குழுவினர்  ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு பாலத்தை அகற்றக்கோரி மீட்பு குழுவினர்  ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் தமிழரசன் தலைமையில் இன்று காலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி கோஷம் எழுப்பினார்கள்,.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கோவில்பட்டி பிரதானசாலை அருகில் அமைந்துள்ள நீர்வரத்து ஓடையில் செண்பகவல்லி அம்மன் கோவில் சார்பாக கடைகள் கட்ட அனுமதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதனால் மழைக்காலங்களில் பெருகிவரும் நீர், அருகில் உள்ள குளங்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு வந்தது,. இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து  நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தகோரி தொடர்ந்து போராடியதன் விளைவாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன,

இந்த் நிலையில் தற்போது நீர்வரத்து ஓடையில் ராமசாமி தியேட்டர் அருகில் 20×20 என்ற அளவில் ஒரு பாலம் இரவோடு இரவாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது,

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பாலம் கட்ட அதிகாரிகள் அனுமதித்து இருப்பது உயர்நீதிமன்றத்தை  அவமதிக்கும் செயலாகும். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், கோவில்பட்டி கோட்டாட்சியர் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதித்து உள்ளார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்,

எனவே கோட்டாட்சியர் , நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு பிறகு தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஓடையில் தடுப்பு சுவர் எழுப்பி பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் புதிய  காரணமாக ஆக்கிமிரப்பு பாலம் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *