• April 27, 2024

கோவில்பட்டி புது அப்பனேரி விக்ன விநாயகர் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

 கோவில்பட்டி புது அப்பனேரி  விக்ன  விநாயகர் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

தமிழ் மாதங்களில் பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்ட மார்கழி கடவுள் வழிபாட்டுக்கான மாதமாக கருதப்படுகிறது.. பல ஆன்மீக சிறப்பம்சங்களக் கொண்டுள்ளது.

வைணவ வழிபாடு மட்டுமல்லாமல், இந்த மாதத்தில் சைவ வழிபாடும் சிறப்பாக செய்யப்படுகிறது.மார்கழி என்றாலே நம் அனைவருக்கும் தோன்றுவது திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவைதான்.

இந்த மாதம் முழுவதும் இறைவனையும், இயற்கையையும் வணங்கும் மாதமாக கூறப்படுகிறது. தேவர்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம். இந்த மாதத்தில் ஆலயம் சென்று வழிபட்டால் அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி மார்கழி மாதம்  பிறந்ததில் இருந்து அதிகாலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தபடுகின்றன, கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்திலும் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கின்றன, பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

அந்த வகையில் கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்ன விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன, ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் பூஜைகளை கோவில் பூசாரி கார்த்திக் செய்து வருகிறார்.

வழக்கம் போல் இன்று காலை நடந்த சிறப்பு பூஜையில் அந்த பகுதியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். குடியிருப்போர் நலசங்க தலைவர் கோலப்பன், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்,

 பூஜையின் போது பெண் பக்தர்கள் விநாயகர் அகவல் படித்தனர், அபிஷேக ஆராதனைகள் முடிந்து பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

2 Comments

  • Winning in silambam competition

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *