300 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோவில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். தமிழகத்தில் எண்ணிலடங்கா கோவில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன. அவற்றில் ஒரு கோவில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோவில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி […]
.திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை […]
திருச்செந்தூர் செந்தில் வேலவன் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். அக்கிணறே நாழி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் என்றாலே அங்கு கடற்கரையோரமாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் நினைவுதான் வரும். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற திருக்கோயில் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகத் திகழ்கிறது. முருகப்பெருமானின் வாழ்வின் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற இடமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. அவர் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் வதம் […]
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு வட மேற்கு முனையில் அமைந்துள்ளது. பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில். இந்த அம்மனை, வடக்கு வாய் செல்வி, செண்பகச் செல்வி என்றும் அழைக்கிறார்கள். தற்போது ‘புட்டாத்தி அம்மன்’ என்று இந்த அம்பிகை அழைக்கப்படுகிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு. இக்கோயில் அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும் சூலமும், இடக்கைகளில் பாசமும் கபாலமும் கொண்டு காட்சி தருகிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க, அம்பிகை அழகாகக் […]
நாம் கோவில்களில் சாமி கும்பிடும் போது கடவுளுக்கு தூபம் காட்டுவதை பார்த்திருப்போம். மேலும் வீடுகளிலும் தூபம் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்து சாஸ்திரத்தில் மட்டுமல்லாமல் வேறு சில மதங்களிலும் தூபம் போடும் வழக்கம் உள்ளது. அவ்வாறு தூபம் போடும் போது நம்மிடம் உள்ள கெட்ட திருஷ்டிகள் விலகி நேர்மறையான சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆன்மீக ரீதியாக இந்துக்களுக்கு சில கிழமைகள் முக்கியமான கிழமைகளாக பார்க்கப்படுவதுண்டு. அதில் செவ்வாய், வெள்ளி இந்த இரு கிழமைகளும் […]
கோவில் கோபுரம் , விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன? என்பது பற்றிய விளக்கம்இங்கே காணலாம். கோவில் என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ள வேண்டும். இதனையே திருமந்திரத்தல் திருமூலர் ” மானிடர் ஆக்கை சிதம்பரம் “என்பார் மனிதனின் தலை கழுத்து மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படி யாக கோவிலின் கர்ப்பக் கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன, கருவரை விமானம் = தலை அர்த்த மண்டபம் = கழுத்து மகாமண்டபம் = மார்பு […]
அந்த மன்னனின் பெயர் சித்திரவர்மன். அவனுடைய மகள் சீமந்தினி. மகளின் மீது தந்தை உயிரையே வைத்திருந்தான். ஒருநாள்… ஜோதிட வல்லுநர்களை அழைத்தான். தன் மகளுக்கு ஜாதகம் எழுதும்படி பணித்தான். அடடா… உங்கள் மகளின் ஜாதகம் அமோகமாக இருக்கிறது. அழகில் லக்ஷ்மிக்கு இணையானவள். கலை மற்றும் வித்தைகளில் கலைமகளைப் போல் திகழ்வாள். வீரத்திலும் தீரத்திலும் அன்னை உமையவளின் அடியொற்றி வாழ்வாள். உலகமே மெச்சும் ஆண்மகனை, கணவனாக அடைவாள்’ என்றார் ஜோதிடர் ஒருவர். இன்னொரு ஜோதிடர் இறுகிய முகத்துடன் தலை […]
சூரியன் தோஷம்:1.அஸ்வினி2.ஆயில்யம்3.அனுஷம் 4.பூரட்டாதி சந்திரன் தோஷம்:1.பரணி2.மகம்3.கேட்டை 4.உத்திரட்டாதி செவ்வாய் தோஷம்:1.கார்த்திகை2.பூரம்3.மூலம்4.ரேவதி குரு தோஷம்:1.மிருகஷிரிசம்2.அஸ்தம்3.உத்திராடம் புதன் தோஷம்:1.ரோஹினி2.உத்திரம் 3.பூராடம் சுக்கிரன் தோஷம்:1.திருவாதிரை2.சித்திரை3.திருவோணம் சனி தோஷம்:1.புனர்பூசம்2.ஸ்வாதி3.அவிட்டம் ராகு தோஷம்:1.பூசம்2.விசாகம் 3.சதயம் கேது மோட்ச கிரஹம் என்பதால் கேதுவின் சாபம் எந்த நட்சத்திரத்துக்கும் இல்லை.
சிலருக்கு இந்த மந்திரங்களை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்கிற சந்தேகம் வந்து விடுகின்றது. 27 நட்சத்திரங்களுக்கும் தலா 4 பாதங்கள் வீதம் 108 பாதங்களில் இருந்து வரும் சக்திகளை கிரகித்து உடலில் உள்ள ஆறு ஆதாரங்களை நன்றாக இயங்கும் வகையில் தூண்டச் செய்ய 108 முறை உச்சரிக்க வேண்டும். சகஸ்ராரத்தில் உள்ள 1008 இதழ்களில் உள்ள அக்ஷரங்களை தூண்டிவிட்டு எல்லா நாடி, நரம்புகளுக்கும் சக்தி கிடைத்திட 1008 முறை உச்சரிக்க வேண்டும். வாயினால் சொல்வதைவிட மனதுக்குள் […]
ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஒரு சிறப்பான நாள் தான் அட்சய திருதியை. ‘அட்சயம்” என்றால் வளர்வது மற்றும் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். அந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும், தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும். சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை திதியை நாம் […]
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022