• April 28, 2025

முருகப்பெருமான் அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும்

 முருகப்பெருமான் அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும்

தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது அபிஷேகம் செய்வது. அனைத்து தெய்வங்களுக்குமே பல விதமான அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

சிவனை அபிஷேக பிரியர் என்றே சொல்லுவதுண்டு. அதே போல் முருகபெருமான்  என்றால் பால், பஞ்சாமிர்தம் தான் நினைவிற்கு வரும்.

கோவிலில் சுவாமிக்கு நடக்கும் மொத்த அபிஷேகத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சிலர் செய்வார்கள். இதற்கு சர்வ அபிஷேகம் என்று பொருள். சர்வ அபிஷேகம், சகல விதமான பாவ நிவர்த்தியை தரும் என்பார்கள்.

இப்படி மொத்தமாக அபிஷேகத்திற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், தங்களுடைய பிரச்சினைகள், குறைகள் தீருவதற்கு உரிய பொருளை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்தால், சிறப்பான பலன் கிடைக்கும். ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்வதால் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும்.

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று அபிஷேகம். பல தெய்வங்களை வழிபட்ட பலனை தரும் அற்புத தெய்வமான முருகப் பெருமானை சில குறிப்பிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

அதுவும் முருகனுக்குரிய சஷ்டி திதி(வளர்பிறை, தேய்பிறை சஷ்டி இரண்டிலும்), கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களில் இந்த அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். முருகனுக்கு மட்டுமின்றி வேல், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்வத இதே பலன் கிடைக்கும்.

எந்தெந்த பிரச்சினைகள் தீருவதற்கு முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

முருகனுக்குரிய அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும் :

* திருமஞ்சனம் – தோல் நோய்கள் நீங்கும்.

* பஞ்சாமிர்தம் – நோய்கள் விலகி, ஆரோக்கியம் பெருகும். பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக படைத்தால் செல்வம் பெருகும்.

* பால் – குடும்ப விருத்தி, குல விருத்தி ஏற்படும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

* தயிர் – குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* எலுமிச்சை – எம பயம் நீங்கும்.

* இளநீர் – மனதில் அமைதி, குடும்பத்தில் நிம்மதியை தரும்.

* பழ வகைகள் – பிரபலமடைய செய்யும்.

* கரும்புச்சாறு – உடல் நோய்களை நீக்கும்.

* சந்தனம் – பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.

* பன்னீர் – தொழில், வாழ்க்கையில் வளர்ச்சியை தரும்.

* விபூதி – சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

* மஞ்சள் – தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.

* குங்குமம் – குல விருத்தி, குடும்பத்தில் சந்தோஷம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *