வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,887 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. இதனால் 14 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை பராமரிப்பில் 14,141 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ததால், பல்வேறு மாவட்டங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 4,887 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எம்.எல்.ஏ.வை ஷாப்பிங் செய்வதில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? . தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?. இந்தியா […]
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி […]
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் விடியல் பயண திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண நகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வசதி இருந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, இந்த திட்டத்தின் பெயரை வெற்றிப் பயணத் திட்டம் என்று மாற்றியதுடன், சாதாரண நகர பஸ்களையும் தாண்டி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காந்தி ஜெயந்தி […]
தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் ஆள் சேர்த்து விடுவதாகக் கூறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் அனுமதி பெற்று, சிறப்பு புலனாய்வு போலீசார் சார்லஸ் தலைமையில் கடந்த 29-ந்தேதி தஞ்சாவூரில் 6 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கிலாபத் இயக்கத்தில் இருப்பதாக சந்தேகித்து தஞ்சாவூர் கீழ்வாசல் பகுதியை சேர்ந்த சாஹிர் உசேன்,அப்துல் வர்கீஸ், உமர் முக்தார், யாசர் அப்துல், சம்சுதின், ஷேக் பரீத் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர். நாங்கள் அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது ‘எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் பணம் கொடுக்கவில்லையே.. ‘ என்று சில கிராம மக்கள் என்னிடம் கேட்டார்கள். எந்தெந்த கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள். தூயசக்தி, நாங்கள் ஓட்டுக்கு எல்லாம் பணம் […]
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. பிரமுகர் அரசகுமார் என்பவரும், அவருடைய உறவினர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் போலீசார் குற்றம்சுமத்தி உள்ளனர். அவர் தொடர்பான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந் தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் […]
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்தது. அந்த தடையை நீக்கக்கோரி முதல் அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பு கூறுகையில், “இடைத்தேர்தல் அறிவிக்காதது நிரந்தரமானதல்ல. வழக்கை ஐகோர்ட்டு முடித்ததும் தேர்தல் நடத்தப்படும். […]
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில், 107 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்தது. இவா்களுக்கு திமுக கூட்டணிகள் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. […]
நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியை சேர்ந்தவர் டால்டன் (வயது 76). இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம்(78) உள்பட 3 சகோதரர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவருமே குவைத்தில் வேலைபார்த்துவிட்டு தற்போது சொந்த ஊர் திரும்பியவர்கள். இவர்கள் 4 பேரும் மணிப்புரம் பகுதியில் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனியே வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். டால்டன் அப்பகுதியில் பெட்ரோல்பங்க் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே மணிப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் உள்ளது. அந்த கோவில் அருகே […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







