தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மதுரை அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்ச்செல்வன், மரு. ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோரும் உடனிருந்தனர். […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 73. பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் […]
மதுரை – தூத்துக்குடி இடையே ரெயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால், கைவிடப்பட்டதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்தில் சென்னையில் அளித்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்டம் தொடர்பான கேள்வியை தவறாக புரிந்துகொண்டு மந்திரி பதிலளித்துவிட்டதால் குழப்பம் நேர்ந்திருப்பதாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- “மதுரை […]
சென்னை திமுக 131வது வட்டத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2000 பேருக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா சென்னை அசோக்நகர் – 10வது அவென்யூ கலைஞர் பொதுநல மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி பேசியதாவது:- நம் எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் […]
நெல்லையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளது. 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும். 56 வயதான யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு சில நாட்களாக நடமாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தும் யானை உறங்காமல் நின்றபடியே […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிரதமர் மோடி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.தமிழகத்தின் […]
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என […]
சுவாமிஜியின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்தி அடைந்த பின்னர் சுவாமி விவேகானந்தர் பல்வேறு புனைப் பெயர்களில் பாரதம் முழுவதும் சுற்றி வந்து பாரத மக்களை பற்றி புரிந்து கொண்டார். பாரத மக்களும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக புரிய தொடங்கினர்.. மன்னர்கள்,மகான்கள், மாணவர்கள்,மாதர்கள் என்று சமுதாயத்தின் பல தரப்பினரும் சுவாமிஜியின் கருத்துகளுக்கு செவி கொடுக்க ஆரம்பித்திருந்த நேரம்… பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக சுவாமிஜி கன்னியாகுமரிக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்து விட்டு வெளியே வருகிறார். கடல் நடுவே […]
கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சேர்ந்தவர் சுலைமான் (வயது 50). இவரது மனைவி சவுரால் பேபி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுலைமான் கால்நடைகள் விற்பனை மற்றும் இறைச்சி கடை நடத்தி வருகிறார். முகமது சாலிஹாபுரத்தில் உள்ள இவரது வீட்டின் எதிரே புதிதாக வீடு கட்டி இருக்கிறார். ஆனால், அவர் இரவு நேரம் பழைய வீட்டில் தூங்குவது வழக்கம். புதன்கிழமை இரவு சுலைமான் மற்றும் அவரது மனைவி, 2 மகள்கள் ஆகியோர் பழைய வீட்டில் தூங்கினர். மறுநாள் காலையில் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் , சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)