தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ. திருமண்டல நீதிமன்ற இயக்குநர், உறுப்பினர் நியமனம்
ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், செலவின் ராஜ்குமார்
தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ.திருமண்டல லே செயலாளர் எஸ். டி. கே. ராஜன் மற்றும் திருமண்டல மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஜெபா ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு கோவில்பட்டியை சேர்ந்த இரண்டு வக்கீல்களை நியமனம் செய்துள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ. திருமண்டல நீதிமன்ற இயக்குநராக கோவில்பட்டி வக்கீல் டி.ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதே போல் டயோசீசன் கோர்ட்டு உறுப்பினராக கோவில்பட்டி வக்கீல் செல்வின் ராஜ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்

புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வக்கீல்கள் ஆண்டரூஸ் சாம்ராஜ், செல்வின் ராஜ்குமார் ஆகியோருக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் “நீதியும் நேர்மையும் நிறைந்த உங்கள் சேவை,திருச்சபைக்கும் சமூகத்திற்கும்
மேலும் பல ஆசீர்வாதங்களைத் தரும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகளும்
இறை வழிநடத்தலுடனான வெற்றிப் பயணமும் உண்டாகட்டும் “என்று குறிப்பிட்டுள்ளனர்.







