தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்டஅளவிலான தடகளப் போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது., தூத்துக்குடி, திருச்செந்தூர், கயத்தாறு கோவில்பட்டி, விளாத்திகுளம்,, ஒட்டபிடாரம், ஸ்ரீவைகுண்டம், , சாத்தான்குளம் ஆகிய குறுவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கொண்டனர்.இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நீளம் தாண்டுதலில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 ம் வகுப்பு மாணவர் செந்தில் பிரபு இரண்டாம் இடம் பெற்றார். அதே பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரேஷ்மா […]
இன்று (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. * வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுன்ட்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும். * , எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. செய்யாவிட்டால் வீட்டு உபயோக சிலிண்டரை சலுகை விலையில் பெற முடியாது. இதனால், செப்டம்பர் மாதத்திற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலை மாற வாய்ப்பு இருக்கிறது. *ரூ.3 கோடி […]
சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். aஅதன் விவரம் வருமாறு:=’ * உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். *மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி ஒதுக்கப்படும். *, அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் […]
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் […]
ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள […]
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது. மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற […]
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்பதால் அங்கு சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது. திபெத் எல்லையையொட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடேகோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து, காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை அப்பா் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்டபத்திரகாளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் நடைபெற்றது, இதையொட்டி பக்தர்கள் திரண்டிருந்தனர், குறிப்பிட்ட நேரத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம்,\ நடைபெற்றது. மேலும் மகா கணபதி ஹோமம், சக்தி ஹோமம்,பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, அபிஷேகம் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர், ரேஷன் அரிசியில் மக்கள் சோறாக்கி சாப்பிடுவது இல்லை என்றும், ஆடு, மாடு, கோழிக்குதான் போடுகிறார்கள் என்றும் கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ரேஷன் அரிசியை மக்கள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்துதான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார். இட்லி, தோசை எல்லாம் உணவு கணக்கில் வராதா? சாப்பிடும் வகையில் இருந்தால் மக்கள் […]







