நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று மற்றும் எழுது பொருட்கள்
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு.. கோவில்பட்டி புது ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

மேலும் மரக்கன்றுகள் மற்றும் எழுது பொருட்களை ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் அவரது துணைவியார் ஆனந்தவல்லி சீனிவாசன்.. வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.பசுமை இயக்கம் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.. அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கராஜ்,
பாண்டியன் காளியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியை நன்றி கூறினார்.








