• March 20, 2026

தோஷம் -பரிகாரங்கள்

 தோஷம் -பரிகாரங்கள்

1.இராகு-கேது தோஷம் நீங்க

ஒரு‌ வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில் அல்லது நாகர் வணங்கிய கோயிலில் பால் அபிஷேகம் செய்து, புளியோதரை அல்லது தயிர் சாதம் தானம் செய்தால் இராகு-கேது தோஷம் நீங்கும்.

2.பித்ரு தோஷம் 

ஆவணி மாத அமாவாசை அல்லது மாத அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அன்னதானம்  செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

3.பிரம்மஹத்தி தோஷம் 

இராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தத்தில் நீராடி,

சங்கல்ப பூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

4.நாக தோஷம் 

நாகதோஷம் உள்ளவர்கள்

நாக சதுர்த்தி நாளில் நாகர் வணங்கிய கோவிலில் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் அன்னதானம் செய்தால் தோஷம் நீங்கும்.

5.புத்திர தோஷம் 

கணவன்-மனைவி சேர்ந்து

இராமேஸ்வரம் அல்லது திருப்பதி சென்று 21 தடவை மூழ்கி தீர்த்த ஸ்நானம் செய்ய வேண்டும். பின்னர் சிறு பிள்ளைகளுக்கு தானம் செய்தால் புத்திர தோஷம் நீங்கும்.

6.சுக்கிர தோஷம் 

வியாழக்கிழமை அன்று

வெள்ளி விக்கிரகம், பூ, வெற்றிலை, பழம் வைத்து

ஜெபம் செய்தால் சுக்கிர தோஷம் நீங்கும்.

7.சந்திர தோஷம் 

சந்திர பாதிப்பு உள்ளவர்கள்

வெள்ளி, பால், வெண்ணை,  வைத்து பூஜை செய்து சந்திர ஓரையில் தானம் செய்தால் சந்திர தோஷம் நீங்கும்.

8.செவ்வாய் தோஷம் 

நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு

27 செவ்வாய் கிழமைகள் நெய்விளக்கு ஏற்றினால்

செவ்வாய் தோஷம் நீங்கும்.

9.உத்ர நட்சத்திர தோஷம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு தானம் செய்தால் பாவ நிவர்த்தி ஏற்படும்.

10.பூசம் நட்சத்திர தோஷம்

பசு தானம் செய்ய வேண்டும் . அது முடியாவிட்டால்

ஹயக்ரீவரை வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும்.

சர்வ தோஷ நிவர்த்தி மந்திரம்:

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் பிரச்சோதயாத்”

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *