• March 15, 2026

அருப்புக்கோட்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 அருப்புக்கோட்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக்குலேசன் பள்ளியில்  சமூக நல்லிணக்க விழாவாக இரமலான் பண்டிகை மற்றும் அறிவியல் கண்காட்சி   நடைபெற்றது. 

மாணவ, மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். பள்ளியின் முதல்வர்  ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். விஸ்டம் எஜுகேசனல் சொசைட்டி தலைவர் ஆயை மு.காஜாமைதீன்  தலைமை தாங்கினார்.. செயலாளர் சம்சுதீன், உறுப்பினர்கள் அகமது யாசிர், அம்சா கனி சிக்கந்தர், நசீரா, மற்றும் அகமது ஹபீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கோவில்பட்டி இசை FM இயக்குநர் கோ.சுரேஷ் குமார் (மைக்ரோகிரின் செயல்பாட்டாளர்) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து சமூக நல்லிணக்க உரை நிகழ்த்தினார். 

மீரா மருத்துவமனை சார்பில் அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வைத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கண்காட்சியில் பங்குபெற்ற  அனைத்து மாணவர்களுக்கும் எம்.என்.எர்சாத்கான்   சார்பில்  பரிசுகள் மற்றும்  பிரியாணி வழங்கப்பட்டது. 

ஆசிரியர் வீரசுதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் யாஸ்மித் ராணி நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *