• March 12, 2026

கோவில்பட்டியில் `தீப்பெட்டி ஆலைகளில் பாதுகாப்பு மேம்பாடு ’ பற்றிய கருத்தரங்கம்

 கோவில்பட்டியில் `தீப்பெட்டி ஆலைகளில் பாதுகாப்பு மேம்பாடு ’ பற்றிய கருத்தரங்கம்

கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பரநாடார் காமாட்சி அம்மாள்  திருமண மண்டபத்தில் தீப்பெட்டி பாதுகாப்பு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது,.

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட  இந்த கருத்தரங்கில் கோவில்பட்டி மற்றும் சிவகாசி பகுதிகளை சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்,.

தீப்பெட்டி தொழிற்சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது? , அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்து மதுரை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்ஆர்.சித்தார்தன், கோவில்பட்டி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர், எஸ். ரவிக்குமார் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.

கூட்ட த்தில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக தலைவர்.விஜய் ஆனந்த், செயலாளர்.வரதராஜன், என்,.ராஜவேல் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் நேசனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக தலைவர் எம்,.பரமசிவம்,.சோனியா ஜோசப்  மற்றும் உறுப்பினர்களும்-குளோபல் மேச்மேனுபாக்சர் அசோசியேஷன் தலைவர்.ரத்னகுமார் ,செயலாளர் மற்றும் உறுப்பினர்களும், மேலும் சிவகாசி ஆல் இந்தியா மேச்சேம்பர்ஸ் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். =

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *