வந்தே மாதரம் பாடும் போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் ; மத்திய அரசு உத்தரவு
தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது அத்தகைய குறிப்பிட்ட சட்டப்பூர்வ விதிகள் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை.
எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது. ஆனால் அதற்குரிய கவுரவத்தைச் சிதைக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், ‘வந்தே மாதரம்’ பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். அதில் கூறி இருப்பதாவது:-
* தேசியக் கொடி ஏற்றும் போது ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட வேண்டும்
*ஜனாதிபதி, கவர்னர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட வேண்டும்
* ஜனாதிபதி மக்களிடம் உரையாற்றும் முன்பும், பின்பும் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும்
* தேசியக் கொடியை பேரணியாக கொண்டு வரப்படும் போது ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும்
* ‘வந்தே மாதரம்’ பாடல் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்
* அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட வேண்டும்

* சினிமா தியேட்டர்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
* ஏற்கனவே தேசத்தின் மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971 தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது.
* அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ) தேசிய கீதத்திற்கு மரியாதை காட்ட மக்கள் எழுந்து நிற்க வேண்டும்
இவ்வாறு கூறி உள்ளது,







