கோவில்பட்டி, தென்காசி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 6 பேர் பலி


தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற பஸ்சும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற பஸ்சும் இன்று காலை விபத்தில் சிக்கின.
இந்த பஸ்கள் கடையநல்லூர் அருகே இடைகால் அடுத்த துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, இதில் இரண்டு பஸ்களின் முன்பகுதி நொறுங்கியது.

விபத்தில் சிக்கிய இரண்டு பஸ்களும் தனியார் பஸ்கள் ஆகும்/ இந்த பஸ்களில் இருந்தவர்களில் 5 பெண்கள் உள்பட 6 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்து போனார்கள்.40 க்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அதிவேகத்தில் பஸ்களை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் உயிரிழந்தவர்கள் யார் என்பதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.
6 பேரை பலிகொண்ட சாலை விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







