கோவில்பட்டி ஒன்றியத்துடன் 12 ஊராட்சிகள் இணைப்பு: தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் வெற்றி கொண்டாட்டம்

இளையரசனேந்தல் பிர்காவில் இருந்த முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி,,பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம், , இளையரசனேந்தல் ஜமீன்தேவர்குளம், ஆகிய 12 ஊராட்சிகள் 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இணைக்கப்பட்டது.
முதலில் வருவாய்துறை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன்பிறகு படிப்படியாக காவல்துறை, நெடுஞ்சாலை துறை, சுகாதார துறை, நூலக துறை, நீதித்துறை ஆகிய பல்வேறு துறைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. ஆனால் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை ஆகியவை இணைக்க்ப்படாததால் 12 பஞ்சாயத்துகள் மட்டும், குருவிகுளம் யூனியனில் தொடர்ந்தது.

இதனை கண்டித்து தேசிய விவசாயிகள் சங்கம் அதன் உடன் இணைந்த இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு ஆகிய அமைப்புகள் தொடர்ந்து 17 ஆண்டுகள் மக்களை திரட்டி போராடி வந்த நிலையில் தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டம், குருவிகுளம் யூனியனில் இடம்பெற்று இருந்தது.
இளையரசனேந்தல் பிர்காவில் இருந்த 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து நடந்து போராடி வந்த நிலையில் தேசிய விவசாயிகள் சங்கம் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி போராடின.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற கிளையானது மேற்படி 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க உத்தரவு பிறப்பித்த நிலையில்,தமிழக அரசும் மேற்படி 12 பஞ்சாயத்துக்களை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க அரசாணை பிறப்பித்து இருக்கிறது.

அதனை வரவேற்றும், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து இன்று மாலை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அய்யலுசாமி முன்னிலை வகித்தனர். தேசிய விவசாயிகள் சங்க பொது செயலாளர் சுரேஷ் குமார்,தேசிய ஜனதா கட்சி தலைவர் அய்யனார்,தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ஞானமூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







