கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் SIR படிவங்கள் பூர்த்தி செய்து தரும் அலுவலகங்கள் திறப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் பூர்த்தி செய்து தருகின்ற அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இந்த அலுவலகம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும், எனவே பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அலுவலக திறப்பு விழாவில் கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன் , மாநில வழக்கறிஞர் பிரிவு ஈஸ்வரமூர்த்தி, ஆவின் தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர் போடுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், நகர அவைத்தலைவர் அப்பாசாமி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்
இதே போல் ஏவி ஸ்கூல் அருகில், ஜெயா டயர் அருகில் மந்தித்தோப்பு ரோடு, பாரதி நகர் யோகீஸ்வரர் திருமண மண்டபம் அருகில், புதுக்கிராமம், இல்லத்தார் பள்ளி எதிர்ப்புறம் ஆகிய இடங்களில் SIR படிவங்கள் பூர்த்தி செய்து தருகின்ற அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.







