கோவில்பட்டி சுந்தரேஸ்வரர் கோவிலில் 17 -ந்தேதி கார்த்திகை மாத சோமவார பூஜை
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆகும்.
எனவே சோமவாரங்களில் விரதம் இருந்து ஒருபொழுது மட்டும் உண்டு விரதத்தை கடைபிடிக்க நோய்கள் நீங்குவதுடன், வாழ்க்கைத் துணை சிறப்பான முறையில் அமையும். தம்பதியரின் ஒற்றுமை ஓங்கும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

அந்த வகைகளில் சிவாலயங்களில் வருகிற 17-ஆம் தேதி திங்கட்கிழமை சோமவார சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது
கோவில்பட்டி மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் 17.11.2025 திங்கட்கிழமை கார்த்திகை மாத சோமவார பூஜை நடைபெறும்.
காலை 10 மணிக்கு கும்ப பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை.
மாலை 3.45 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கு மகா அபிஷேகம் நாசக்கிறது.
மாலை 4.15 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்

மாலை 4.35 மணிக்கு கும்ப அபிஷேகமும், மீனாட்சி அம்மனுக்கு கும்ப அபிஷேகமும் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து பிரதோஷகால பூஜை, தீபாராதனை நடைபெறும்.பக்தர்கள் அனைவரும் பூஜையில் கலந்துகொண்டு இறையருள் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அபிஷேக பொருட்கள், பூக்கள், பழங்கள் கண்டுவரும் பக்தர்கள் காலையில் கோவிலுக்கு கொண்டு நம்து தரலாம்.
கட்டளைதாரர்: சி.சரவணன் (மதிமுக முன்னாள் கவுன்சிலர்) ச.மாலதி குடும்பத்தார். கோவில்பட்டி.







