தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை: சிசிடிவி கேமரா காட்சி மூலம் 3 பேர் அடையாளம் தெரிந்தது
தூத்துக்குடி சிலோன் காலனி மாரியப்பன் மகன் அஜய் என்ற ஜப்பான் (வயது 21), இவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 4 வழக்குகள் தாக கூறப்படுகிறது.. இவர் பசும்பொன் நகர் இரண்டாவது தெருவில் நேற்று இரவு 8 மணி அளவில் படுகொலை செய்யப்பட்டார்.
அவரை 3 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் நிலை குலைந்து போன அஜய் தப்பிக்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார்..

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஜய் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் 13 வயது தங்கையை காணவில்லையாம் இது குறித்து அவரது தாயார் முத்துச்செல்வி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் அவரது அண்ணன் அஜய் என்ற ஜப்பான் பசும்பொன் நகரில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தங்கையின் விவகாரம் காரணமாக இவரை மர்ம நபர்கள் ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரை 3 பேர் சேர்ந்து கொலை செய்தது அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் பார்வையிட்டார்.







