அகில இந்திய ஆக்கி: சென்னையை வீழ்த்திய கோவில்பட்டி- சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்ற முருகேசன்


கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
விழாவிற்கு முன்னாள் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார்.
10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 அணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரித்து எ பிரிவில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி & சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி ஆகியவை இடம் பெற்றுள்ளன
பி பிரிவில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, கர்நாடகா ஹாக்கி பெல்லாரி & கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணிகளும் சி பிரிவில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி அணி & பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

டி பிரிவில் பெங்களூரு கனரா வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, மும்பை சென்ட்ரல் இரயில்வே அணி & சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
நேற்று காலை நடந்த முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம்டேக்ஸ் அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.

மாலையில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியுடன் சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி மோதியது,
இதில் 1:0 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணிவெற்றி பெற்றது.
அஜித் குமார் மற்றும் பிரவீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணி வீரர் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.
3வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியுடன் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி மோதியது இதில் 4:0 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
சுப்பையா தாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது மும்பை யூனியன் வங்கி அணி வீரர் வெங்கடேஷ் கெஞ்செ-வுக்கு வழங்கப்பட்டது.
4வது லீக் ஆட்டத்தில் சென்னை அக்கவுண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி மோதியது ..
இந்த ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புடன் காணப்பட்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் திலீபன் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

3-வது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் முருகேசன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்
தொடர்ந்து கோவில்பட்டி அணி வீரர்கள் கிருஷ்ணன்(10வது நிமிடத்தில்) பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோலும்,.
முரளிகிருஷ்ணன் (17-வது நிமிடத்தில்) முரளிகிருஷ்ணன் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோலும் போட்டனர்,.
28-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் சூர்யா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 35-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் வீரத்தமிழன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
40-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் திரஸுல் கணபதி பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
41-வது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் அரவிந்த் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

44-வது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் நிஷி தேவ அருள் பெனால்டி கார்னர் கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
51-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் திரஸுல் கணபதி பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டார்.
54-வது நிமிடத்தில் கோவில்பட்டி வீரர் முருகேசன் பெனால்டி கார்னர் கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இது வெற்றிக்கு வழிவகுத்தது. அதன்பிறகு யாரும் கோல் போடவிள்ளில்.
இறுதியில் 6:5 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.
பாலாஜி குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் முருகேசனுக்கு வழங்கப்பட்டது.
