• May 14, 2025

இறந்துவிட்டதாக வதந்தி: “திருப்பாச்சி” நடிகர் பெஞ்சமின் வேதனை

 இறந்துவிட்டதாக வதந்தி: “திருப்பாச்சி” நடிகர் பெஞ்சமின் வேதனை

நடிகர் பெஞ்சமின் வெற்றி கொடிகட்டு, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடிகர் பெஞ்சமின் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
இதனை மறுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறுதலான செய்திகளைப் போட்டு இருக்கிறார்கள். என்னுடைய புகழை கலங்கப்படுத்துவதற்காக போட்டிருக்கிறார்கள். இது நான்காவது முறை. திருப்பாச்சி பெஞ்சமின் நடிகர் இறந்து போய்விட்டார் என்று சொல்லி போட்டு இருக்கிறார்கள். ரொம்ப சங்கடமாக இருக்கிறது. என் வீட்டுக்கு போய் மக்கள் எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இப்பொழுது பரமத்திவேலூரில் கோரைகாரன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஒரு சில நண்பர்கள் வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இறந்து போய்விட்டார்  எனச் சொல்லி சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இனி யாரையும் புண்படுத்தும் வகையில் இப்படி செய்யாதீர்கள். அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நான் நலமுடன் இருக்கிறேன். இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. திடீரென ஹார்ட் அட்டாக் வந்து எங்கள் வீட்டில் யாருக்காவது இழப்பு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது. எனக்கும் ஹார்ட் அட்டாக் வந்து இப்பொழுதுதான் பிழைத்திருக்கிறேன். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *