தேசிய இளைஞர் தின மாரத்தான் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு .
வருடந்தோறும் ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியர் விடுதியில் தொடங்கிய மாரத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்..கல்லூரி உறுப்பினர் சரவணகுமார், முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இரண்டு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
.மாரத்தானில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி,கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி,உண்ணாமலைக் கல்லூரி, எஸ்எஸ்டிஎம் கல்லூரி,நாடார் மேல்நிலைப்பள்ளி, ஹரிதா பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பள்ளி கல்லூரிகளிலிருந்தும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.பயணியர் விடுதி முன்பு தொடங்கி மெயின் ரோடு வழியாக எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நிறைவடைந்தது
ஆண்கள் பிரிவு மாரத்தான் போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் பவித்ரன், பெண்கள் பிரிவில் கோவில்பட்டி ஹரிதா பப்ளிக் பள்ளி மாணவி முத்தரசி,ஆகியோர் முதல் பரிசாக தலா ரூ 3 ஆயிரம் ,சான்றிதழும் பெற்றனர்.
மேலும் முதல் ஆறு இடங்களுக்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழும் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது
தொடக்கத்தில் கல்லூரி உடற்கல்வியியல் துறை இயக்குனர் செல்லதுரை வரவேற்றார். முடிவில் உடற்கல்விவியல் துறை பேராசிரியர் சிவா நன்றி கூறினார்.
.