விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்
விளாத்திகுளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்தமாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக லட்சுமிபுரம், விருசம்பட்டி, சுப்பிரமணியபுரம், வில்வமரத்துப்பட்டி, விளாத்திகுளம் (ராஜீவ் நகர்)உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஜே..எஸ். டபிள்யு . நிறுவனத்தின் சார்பாக வெள்ள நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிவாரண பொருட்கள் வழங்கிய நிறுவன தலைவர் தென்னவன், மூத்த மேலாளர் பாரதி மற்றும் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யனன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,
வார்டு உறுப்பினர்கள் வேல் ஈஸ்வரி, அன்பில் நாராயணமூர்த்தி, கலைச்செல்வி, செண்பகராஜ், வார்டு செயலாளர் மாரிராஜ், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார் மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,







