• March 6, 2026

காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் சிக்கினர்

 காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் சிக்கினர்

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள்  நடைபெறுவதாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

.இதன் அடிப்படையில் தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன்,திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போலீஸ் ஏட்டுகள் உதயசூரியன் கிளாடிஸ் தியாகு வர்மன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

அந்த சமயத்தில் திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்த  கல்லூரி மாணவர் ஒருவரிடம்  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்,  கழுத்தில் அணிந்திருந்த ஒன்னே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் . திண்டுக்கல் அரண்மனைக்குளம் ரோட்டை சேர்ந்த பிரேம்குமார் (வயது 31) குளத்தூர் ரோடு ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த செந்தூரபாண்டியன் என்ற பாண்டி (வயது 35 ) மாலைப்பட்டி சிவசக்தி ( வயது 37 )ரவுண்ட் ரோடு கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த ஷேக் பரீத் (வயது 29) ஆகியோரது செல்போன் எண்கள் அந்த பகுதியில் சம்பவ நேரங்களில் செயல்பாட்டில் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து. இவர்களை வலை விரித்து தேடி வந்த போலீசார்  திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் . அவர்களை தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை செய்த போது இவர்களில் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த செந்தூரபாண்டியன், பிரேம்குமாருக்கு காதலர்கள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் தனிமையில் ஒதுங்குவதை கண்காணித்து தகவல் கொடுப்பதாகவும், அதன் அடிப்படையில் மற்றவர்கள் வந்து காதலர்களை அடித்து பணம் நகைகளை பறித்ததாகவும் தெரிய வந்தது.

மேலும் காதலர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும். அவர்கள் தனிமையில் இருக்க வேண்டி மறைவிடத்திற்கு  சாலையோரம் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு சற்று ஒதுக்குப்புறமாக சென்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை சுற்றி வளைத்து மிரட்டி வழிப்பறி செய்து வந்தததும் தெரிய வந்தது,

மேலும்  திண்டுக்கல் குளத்தூர் ரோடு தண்ணீர் பந்தல் அடுத்த ரங்கநாதபுரம் கரடு பகுதியில் தனிமையில் சந்திக்கும் கள்ளக்காதலர்களை குறிவைத்தும் இவர்கள் செயல் பட்டுள்ளனர். \இவர்கள் வழிப்பறி செய்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *