கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்படுத்திய மதிமுக சுவரொட்டி
கோவில்பட்டி மெயின் ரோட்டில் ரெயில் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது, இந்த பகுதியில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
`கொள்ளையோ கொள்ளை ‘என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் வைகோ, துரை வைகோ, மற்றும் கோவில்பட்டி மதிமுக நிர்வாகிகள் படங்கள் இடம் பெற்றுள்ளன,
கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அளவுக்கு மீறிய பணம் லஞ்சமாக வசூல் செய்கின்ற போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.
(திருந்துங்கள், திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது,
ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட மதிமுக தற்போது வைத்துள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சுவரொட்டியை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பல்வேறு தரப்பினரும் புகார்களை கூறத்தொடங்கி இருக்கிறார்கள்.