• May 9, 2024

சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் ரவி தேசிய கொடியேற்றினார்; முதல் அமைச்சர் ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்

 சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் ரவி தேசிய கொடியேற்றினார்; முதல் அமைச்சர் ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கவர்னர் ஆர்,.என்,.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி,ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி.ஆகியோரை கவர்னருக்கு முதல் அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அருகில் இருந்த முதல் அமைச்சர் மற்றும் அனைவரும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்கள். அந்த சமயத்தில் வானத்தில் பறந்தபடி ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன,

தொடர்ந்து பல்வேறு படைப்பிரிவுகளின் வீரர்கள் மிடுக்காக அணிவகுத்து வந்தனர், இந்த் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வீர தீர துணிச்சல் மிகுந்த செயல்களுக்காக பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை கிருஷணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த முகமது சுபேர் பெற்றார். அவருக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சி,நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது, இவர் ரொக்க பரிசு ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி  பதக்கம் பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்

இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *