அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : பொதுமக்களிடம் அழைப்பிதழ் கொடுத்து வேண்டுகோள்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா. ஜனதா பொதுச் செயலாளர் வசந்தராஜ் தலைமையில் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி அமுதா,ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் ராஜகாந்தன் ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தனர்.
ராஜீவ் நகர் இபி காலனி காமராஜர் நகர் எஸ் எஸ் டி நகர் காமராஜர் நகர் மேற்கு ஆனந்த நகர் அன்பு கார்டன் பகுதிகளில் பொதுமக்களுக்கு அழைப்பிதழை கொடுத்து நாளை நடக்கவிருக்கும் கும்பாபிஷேக விழாவின் போது வீடு அருகே உள்ள கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் என்று கூறினார்கள்.
மேலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.







