மந்திதோப்பு பூமாதேவி ஆலயத்தில் தை காட்சி திருவிழா நாள்கால் நடுதல்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் தை காட்சி திருவிழா முன்னிட்டு நாள்கால் நடுதல் விழா நடைபெற்றது
இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி
பூஜை நடைபெற்றது. 6 மணிக்கு பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.
பந்தல் கால் நட்டி காலுக்கு பால் மஞ்சள் தீர்த்தம் விட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வ சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி,மணி, சுப்பாராஜ், சங்கரேஸ்வரி,மாரியப்பன் ஆறுமுகம் லட்சுமி மெடிக்கல் மந்திரமூர்த்தி பாலு விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து மாரித்தாய் செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி காட்சி குழுவினர் சார்பில் செய்யப்பட்டது







