154வது பிறந்தநாள்: குருஸ் பர்னாந்து சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து 154வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தி.மு.க. துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக

அதிமுக சார்பில் குருஸ் பர்னாந்து சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு லட்டு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.
அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில மீனவரணி துனைத் தலைவர் எரோமிஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், ஜெ.ஜெ. தனராஜ், அருண்ஜெபக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர் செயலாளர் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், ராஜா பாண்டி, கலைபிரிவு தலைவர் பெத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க.
குரூஸ் பர்னாந்து சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவைத் தலைவர் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், எம்எல்எப் தொழிற்சங்கம் அனல் செல்வராஜ், மாநகர பொருளாளர் செல்லப்பா, மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், வெங்கட்ராமன், பெருமாள் மற்றும் மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.







