குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை மாவட்டநிர்வாகம் சீர்செய்ய வேண்டும்; தே. மு. தி. க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே. மு. தி. க.செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் கோவில்பட்டி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றியகழக செயலாளர்கள் நகரசெயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
*அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தவேண்டும் *கன்னியாகுமாரி மாவட்டசெயலாளர் அமுதன் திருமணநிகழ்ச்சிக்கு 15.11.23 அன்று வருகதரும் கழகபொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வறவேற்ப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது *மழைகாலங்களில் குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை மாவட்டநிர்வாகம் சீர்செய்ய வேண்டும். 4 *கயத்தார் ஒன்றியபகுதிகளில் நீர்நிலை ஓடைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் கனரகவாகனங்கள் இயக்கி விளைநிலங்களுக்கு நீர் வரத்து வருவதை தடுத்துவருகிறது. இதை வருவாய்துறையினர் சீர் செய்யவேண்டும்.இல்லையேல் தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானிக்கபடுகிறது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டஅவைதலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணைசெயலாளர் மாரிச்செல்வம், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், கயத்தார் ஒன்றியசெயலாளர் கண்ணண், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் கயத்தார் அருண், விளாத்திகுளம் மேற்கு மாரியப்பன் புதூர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்







