10 வகையான திருமணங்கள் …..

 10 வகையான திருமணங்கள் …..

சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம்.
60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன?
அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என கண்டிருப்பார்கள். அவர்களின் ஆசி வாங்கும் போது நம் தலைமுறையும் செழிக்கும்.
அப்படி திருமணத்தை செய்பவர்கள் ஆணின் தமிழ் பிறந்த தேதி ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டும். ஜென்ம நட்சத்திரத்தில் ஏன் கொண்டாட வேண்டும்?

ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் ஒவ்வொரு தனி குணம் உண்டு. ஒருவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினால், ஆத்ம காரகனான சூரிய பகவான், ஒருவரின் பிறந்த ஜாதக சூரியனைத் தொடுவதால், அவரின் ஆசி அந்த மாதம் முழுதும் கிடைக்கும்.

அதே போல் சந்திரன் ஜென்ம நட்சத்திரத்தில் நிற்கும். அதனால் அவரின் ஆசியும் கிடைக்கும். சூரியன் பித்ருகாரகனாகவும், சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருக்கின்றனர். நம் ஜென்ம நட்சத்திரத்தின் போது இருவரின் ஆசியும், நம் பெற்றோர்கள் நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் குழந்தைக்கு கிடைக்கும். இதனால் அந்த குழந்தை நல்ல நிலையை அடைவான்.

10 வகை பெயரில் நடக்கும் திருமணங்கள் விவரம் வருமாறு:-

1.) 55ஆவது வயது ஆரம்பமாகும் போது பீம சாந்தி வைபவம் (Bhima Shanthi Vaibhavam)

2.) 60ஆவது வயது ஆரம்பமாகும் போது உக்ரரத சாந்தி வைபவம் (Ugra Ratha Shanthi Vaibhavam)

3.) 61ஆவது வயது ஆரம்பமாகும் போது ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம். (Sashtiapthapoorthi Vaibhavam)

4.) 70ஆவது வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி வைபவம் (Bhima Ratha Shanthi Vaibhavam)

5.) 72ஆவது வயது ஆரம்பமாகும் போது ரத சாந்தி வைபவம் ( Ratha Shanthi Vaibhavam)

6.) 78ஆவது வயதில் ஆரம்பமாகும் போது விஜய சாந்தி வைபவம் (Vijaya Shanthi Vaibhavam)

7.) 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்ல நாளில் – சதாபிஷேகம் வைபவம் (Sathabhishekam Vaibhavam)

8.) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால் – ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) வைபவம் (kanakabhishekam Vaibhavam)

9.) 85ஆவது முதல் 90க்குள் – ம்ருத்யுஞ்ஜய சாந்தி வைபவம் (Mrutyunjaya Shanthi Vaibhavam)

10.) 100ஆவது வயதில் சுபதினத்தில் கொண்டாடப்படுவது பூர்ணாபிஷேகம் வைபவம் (poorabhishekam Vaibhavam)

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *