தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர்.நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. எஸ்.ஐ.ஆர் பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் இதுவரை கொடுக்கப்படவில்லை. படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப்படிவங்களில் 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன.2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளன, வாக்காளர் பட்டியலில் பெயர் […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் நவம்பர் மாதத்திற்கான பராமரிப்பு பணிகள் நாளை 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, […]
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற பஸ்சும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற பஸ்சும் இன்று காலை விபத்தில் சிக்கின. இந்த பஸ்கள் கடையநல்லூர் அருகே இடைகால் அடுத்த துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, இதில் இரண்டு பஸ்களின் முன்பகுதி நொறுங்கியது. விபத்தில் சிக்கிய இரண்டு பஸ்களும் தனியார் பஸ்கள் ஆகும்/ இந்த பஸ்களில் இருந்தவர்களில் 5 பெண்கள் உள்பட 6 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்து போனார்கள்.40 க்கும் […]
நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை குழுவினர் நெல்லைக்கு விரைந்துள்ளனர்.அவர்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர பேரிடர் நேரத்தில் மக்களை காப்பாற்றுவதற்கான அனைத்து விதமாக உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்து உள்ளனர். அதேபோல் 28 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் நெல்லை […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கமும் அரவிந்த் கண் மருத்துவமனனயும் இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று நடத்தும் இலவச பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடந்த முகாமுக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜி ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் என்.ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், […]
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து மழைக்கால இயற்கை மருத்துவ முகாமை கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாய நலக் கூடத்தில் நடத்தின. ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா தலைமையில் நடைபெற்றது. இயற்கை மருத்துவர் திருமுருகன் மற்றும் வர்ம ஆசான் தனசேகரன் ஆகியோர் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் மருத்துவம் அளித்தனர். இம் முகாம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் யோகாசனம் பயிற்சி […]
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக,தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்துவருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டு உள்ளது. […]
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சயில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:- நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்தஇடம்தான் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் […]
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று (22.11.2025) பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று 6 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டில் 8.5 அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 6.5 அடியும்,கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.9 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது. கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, மருதூர் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் […]
கோவில்பட்டி ஒன்றியத்துடன் 12 ஊராட்சிகள் இணைப்பு: தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் வெற்றி
இளையரசனேந்தல் பிர்காவில் இருந்த முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி,,பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம், , இளையரசனேந்தல் ஜமீன்தேவர்குளம், ஆகிய 12 ஊராட்சிகள் 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இணைக்கப்பட்டது. முதலில் வருவாய்துறை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன்பிறகு படிப்படியாக காவல்துறை, நெடுஞ்சாலை துறை, சுகாதார துறை, நூலக துறை, நீதித்துறை ஆகிய பல்வேறு துறைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. […]







