தங்கசங்கிலி…(சிறுகதை)

 தங்கசங்கிலி…(சிறுகதை)

சென்னை நகரின் முக்கியமான பகுதியில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடி.. சந்துருவும் சியாமளாவும்..அந்த வீட்டுக்கு தனி குடித்தனம் வந்தார்கள்.
அவர்கள் புது மண ஜோடி…
சந்துரு என்ஜினீயர். நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தார். சியாமளா..பி.எஸ்.சி படித்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு போனார் சந்துரு.
மனைவி சியாமளா புன்னகை மலர வரவேற்றார்.
சந்துரு..அந்த அன்பு மழையில் நனைந்து வீட்டுக்குள் போனான். தான் கொண்டுவந்த பேக்கை மனைவியிடம் கொடுத்தான். அந்த பையை ஆராய்ந்தார் சியாமளா. அதில்..அவருக்கு எந்த பொருளும் இல்லை. பாசமா. ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பாரு நினைச்சா. ஒண்ணுமே வாங்கிட்டு வரலையே. என்று நினைத்தார்.
ஒருமுழம் மல்லிகை பூ,அல்வா இதெல்லாம். கதையிலும் சினிமாவில் மட்டும் தானா..என்று நினைத்தவருக்கு செல்ல கோபம் வந்தது. சமையல் அறைக்குள் சென்றார்.பாத்திரம் உருண்டது.
என்ன சத்தம் .பாத்திரத்தை பாத்து எடு…என்றார் சந்துரு .இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல ..என்று முணங்கியபடி சூடா.காபி போட்டுக்கொண்டு வந்து டேபிளில் வைத்தார் சியாமளா.
அதை பார்த்த சந்துரு…சிரித்து கொண்டு திருநெல்வேலி அல்வா திருநெல்வேலி அல்வான்னு பெருமையா சொல்வியே..அந்த அல்வாவை வாங்கிட்டு வந்திருக்கேனே..பாத்தியா..அதை ஒரு தட்டிலே எடுத்து கொண்டுவா..என்றார்.
அல்வாவா. ..என்னை ஏமாத்திரியளா..அதெல்லாம்.ஒண்ணையும் காணம். இங்க வந்து பாருங்க..என்றார் சியாமளா.
அப்போதுதான்..சந்துருவுக்கு நினைவு வந்தது. ஆ..மோட்டார் சைக்கிள் பெட்டிக்குள் வைத்திருந்த அல்வாவையும் மல்லிகை பூவையும்..எடுத்துட்டு வர மறந்தது தெரிந்தது.
நான் மறந்துட்டேன் சியாமளா.. இதோ வந்துடுறேன்னு சந்துரு புறப்பட்டார். உடனே சியாமளா..ம். இனி கடைக்கு போயிலாம் வாங்கிட்டு வரவேண்டாம். என்றார்.
சந்துரு..இல்லை..வண்டியிலேதான் இருக்கு எடுத்துட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டு..சாவியை எடுத்துகொண்டு..கட கடவென்று மாடியிலிருந்து..கீழே இறங்கினார்.
இப்படி மறப்பேனா நான்..என்று சொல்லிக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து அதிலிந்த அல்வா பார்சலையும் மல்லிகை பூவையும் எடுத்து கொண்டு மேலே வந்தார்.
சியாமளா. .இதோ..திருநெல்வேலி அல்வா..மதுரை மல்லி..என்று கொடுத்தார்.
சியாமளா..அதை வாங்கி மனசுக்குள் சிரித்து கொண்டார். மல்லிகை பூவை எடுத்து தலையில் சூடிக்கொண்டு அல்வாவை ஒரு தட்டில் எடுத்து கொண்டுவந்து கொடுத்தார்.
சந்துரு அல்வா துண்டை எடுத்து சியாமளாவுக்கு ஊட்டிவிட்டு..தானும்..கொஞ்சம் சாப்பிட்டார். ம்..திருநெல்வேலி அல்வான்னா..அல்வாதான்.அதன் ருசியே தனி என்று சந்துரு புகழ்ந்தார்.
ஏங்க..திருநெல்வேலி அல்வா மாதிரி இல்லைங்க..அது தேனா இனிக்கும்..இது சக்கரை பாகு மாதிரி இருக்கு. என்றார் சியாமளா.
உடனே..சந்துரு…அல்வா பாக்கெட்டிலே திருநெல்வேலி அல்வான்னுதான போட்டிருந்துச்சு..என்றார்.
சியாமளா.அப்படியா.பாக்கெட்டிலே போட்டிருந்திச்சா..எனக்கு இருட்டு கடை அல்வா மாதிரி இல்ல.. என்றார்.எல்லா அல்வாவும்..ஒண்ணு போல இருக்குமா..அதுக்காக நெல்லை அல்வாவ குறை சொல்லாதே..என்றார்.
சியாமளா..உடனே..சும்மா..சொன்னேன் என்றார். அதான..என் மேல் உள்ள கோபத்தை அல்வா மேல காட்டாதே..என்றார் சந்துரு.
சரி,சரி அல்வாவை சாப்பிட்டு..இதோ சாத்தூரு சேவு இருக்கு…எங்க மாமா வாங்கி வந்தது.அதை சாப்பிட்டுட்டு..காபியை குடிங்க என்றார் சியாமளா..
அதை கேட்டதும்..அந்த சேவு இன்னும் இருக்கா..என்றார் சந்துரு. அதுக்கென்ன..எத்தனை நாளானாலும்..அது சுவை குறையாது சாப்பிடுங்க..என்றார் சியாமளா.
சரி,சரி..கொஞ்சம் சாப்பிடுறன்..மீதியை நீ சாப்பிடு..என்றார் சந்துரு.சியாமளா ஏற்றுக்கொண்டார்.ஜன்னலையெல்லாம் ஏன் பூட்டிவச்சிருக்கே..காற்றே வரமாட்டேங்குது என்று சந்துரு.
உடனே சியாமளா..உங்களுக்கு ஒண்ணும் தெரியாது..நகரத்திலே..திருட்டு அதிகம்..ஜன்னலை எல்லாம் பூட்டிவைக்கணுமுன்னு எங்க அம்மா சொன்னாங்க…அதான் பூட்டிவச்சிருக்கேன் என்றார்.
சந்துருவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.சரி..நைட்டு தூங்கின பிறகு திறந்து வச்சிருவோம் என்று நினைத்து கொண்டு சரி..ஜன்னல் மூடியே இருக்கட்டும்..என்றார்.
அதை கேட்டதும் சியாமளாவுக்கு மகிழ்ச்சி…அதை குலைக்க வேண்டாம் என்று எண்ணிய சந்துரு..மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார்.
சியாமளா..உன்னுடைய..டாலர் செயின் நல்லா இருக்கு..வாத்து. டாலர்..அழகு..என்று சந்துரு புகழ்ந்தார்.
சியாமளா..உடனே..அந்த டாலரை எடுத்து வாயில் கடித்தபடி..5 பவுனுங்க..எனக்கு ரொம்ப பிடிக்கும்..உங்களுக்கும் பிடிக்குமா என்றார்.
சந்துரு..ஆமா..உனக்கு பிடிச்சா..எனக்கும் பிடிக்கும்..என்று சொன்னார்.
சியாமளா..அந்த டாலர் செயினை சந்தோசத்துடன் பார்த்தார்.
உங்களுக்கு முட்டை தோசை போட்டுதர்ரேன்.. என்ற சியாமளா..அதற்கான வேலையைதொடங்கினார். சந்துரு டி.வி பார்த்து கொண்டிருந்தார்…முட்டை தோசை ரெடி. தேங்காய் சட்னியுடன் இருவரும் ருசித்து சாப்பிட்டார்கள்.
நேரம் கடந்தது.இருவருக்கும் தூக்கம் கண்களை தழுவியது..கதவை நன்றாக பூட்டிய சியாமளா..ஜன்னல் எல்லாம் நன்றாக பூட்டியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்து படுக்கையில் படுத்தார்.
டாலர் செயினை பிடித்தபடி ஏதோ நினைத்தவாறு படுத்திருந்தார். என்ன சியாமளா..தூக்கம் வரவில்லையா என்று அவரை ஆரத்தழுவினார் சந்துரு.
இரவு இன்பமாய் கடந்தது.
காலை 6 மணி..சியாமளா..படுக்கையைவிட்டு எழுந்தார். தனது விருப்பமான..டாலர் செயினை தடவிபார்த்தார். காணவில்லை.ஆ..எங்கே போச்சு…படுக்கையில் தேடினார்…சிக்கவில்லை.எங்க போச்சு…ஏங்க..நான் டாலர் செயினை காணமுன்னு தேடுறன்..நீங்க நிம்மதியா தூங்குறீங்க.. என்று கத்தினார்.
சந்துரு பயந்து போய் திடுக்கிட்டு எழுந்தார். என்ன ஆச்சு..டாலர் செயினை காணமா..நல்லா தேடிப்பாரு…என்றவர்..மேசை,நாற்காலி..கட்டிலுக்கு அடியில் தேடிபார்த்தார்.
எங்கும்..தென்படவில்லை.சியாமளா..நைட்டு தூங்கும் போது கூட இருந்துச்சே..எங்க போச்சு..என்று கேட்டார் சந்துரு..சியாமளா பெட்டை உதறிபார்த்தார்..எங்கேயும் காணவில்லை.
ஜன்னலை பார்த்தார். சியாமளா படுத்திருந்த இடத்துக்கு மேலே இருந்த ஜன்னலின் ஒரு கதவு திறந்திருந்தது. அய்யோ..திருடன்.தான் என் டாலர் செயினை பறிச்சிட்டு போயிட்டான் என்று கதறி அழுதார் சியாமளா.
ஏய் கதவு, ஜன்னல் பூட்டியிருக்கு எப்படி திருடன் எப்படி வருவான்..என்று சந்துரு கேட்டார். அதற்கு அவர்..ஜன்னலை திறந்து கம்பியைவிட்டு என் டாலர் செயினை திருடிட்டு போயிட்டான் திருடன் ..என்று கதறினார்.
சந்துரு உடனே.ஏய்..ஜன்னலை திருடன் திறக்கல.காத்து வரலன்னு நான்தான் திறந்தேன்…டாலர் செயின் இங்கேதான் எங்கேயும் கிடக்கும்..நல்லா தேடு..என்றார் சந்துரு.அந்த நேரத்தில் செல்போன் ஒலித்தது.
சியாமளாவின் அம்மா பேசினார்.என்ன வீடு எல்லாம் பிடிச்சிருக்கா..காலையிலே எழுந்திட்டியா…ஜன்னல் கதவை எல்லாம் நல்லா பூட்டிவைக்கியா..என்று கேட்டார்.
சியாமளா..போனில்..அம்மா..டாலர் செயினை காணம்..உங்க மாப்பிளை வேற ஜன்னலை திறந்து வச்சிருந்தாரு.. என்று அழுதார்.என்னடி.சொல்லுற…நல்லா தேடிபாரு…நமக்கு சாமி ஒண்ணும்..குறைவைக்கமாட்டாரு..நான் ஒரு மணி நேரம் கழிச்சு பேசுறன்..என்று இணைப்பை துண்டித்தார்.
சியாமளா அழுது கொண்டே இருந்ததார்.சந்துரு..அவரை அமைதிபடுத்தினார்.சியாமளா..டாலர்.செயின் எங்கேயும் போயிருக்காது..நைட்டு நீ எழுந்து பாத்ரூம் போனியா..அங்கே போயி நல்லா தேடிபாத்துட்டு வா..அறுந்து கிறுந்து விழுந்திருக்கும்…என்றார்.
சியாமளா மூக்கை சீந்தியபடி..பாத்ரூம் போய் தேடினார்..உம்..கிடைக்கவில்லை. ஏங்க..இங்கேயும் இல்ல..எங்க அம்மா கேட்பாங்க..நான் என்ன பதில் சொல்வேன்..என்று ஓங்கி அழுதார்.
அப்போது ஹாலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.ஏய்…யாரோ வர்ராங்க போலிருக்கு..நீ இப்படி அழுது கொண்டிருந்தா..ஒருமாதிரி நினைப்பாங்க.. போய் பக்கெட்டில் இருக்கிற தண்ணியை எடுத்து நல்லா மூஞ்சை கழுவிட்டுவா..போ..என்று அனுப்பினார்.
சியாமளா..என் டாலர் செயின் என்று ஏங்கியபடி…பாத்ரூமுக்கு சென்றார். பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து..மூகத்தை கழுவினார்.குளிர்ந்த தண்ணீர்..ஜில்லென்றிருந்தது.தண்ணீரை எடுத்து கண்களைநன்றாக கழுவிவிட்டு பக்கெட்டுக்குள்..கூர்ந்து பார்த்தார்.
ஏதோ.மின்னுவது போல் தெரிந்தது..என்னது..என்று கண்களை விரித்து பார்த்தார்..அட..சியாமளாவின்..டாலர் செயின் தண்ணீரில் சிரித்தது. ஏங்க..செயின் கிடைச்சிடுச்சி என்று சிரித்த முகத்துடன்..அறைக்குள் ஓடி வந்தார் சியாமளா.
அங்கே வீட்டுக்காரரிடம் சந்துரு பேசி கொண்டிருந்தாரு…இல்ல..அழுகை சத்தம் கேட்டவுடன்..நான்..என்னமோன்னு..நினைச்சிட்டேன்..நீங்களும்..நைட்டு பாக்காத டி.வி. சீரியலை..செல்போனில் பாக்கிறேன்னு சொன்னீங்க..ஒரே தமாசு போங்க. என்று சொல்லிவிட்டு சிரித்தபடி மாடியைவிட்டு இறங்கினார்.
நைட்டு பாத்ரூம் போயிட்டு பக்கெட்டில் இருந்த தண்ணீரில் கை கால்கழுவியபோது..டாலர் செயின் அறுந்து தண்ணீரில் விழுந்து இவ்வளவு கலாட்டா ஆகிட்டு..என்று சியாமளா..பெருமூச்சுவிட்டார்.
சரி..இனி செயினை கடிக்காத..இந்த டாலர் செயினை..நகை செய்யும் கடையில் கொடுத்து பத்தவச்சு தர்ரேன் என்றார் சந்துரு.
செல்லமாக..சந்துருவின் தோளில் சாய்ந்தாள் சியாமளா…
வே.தபசுக்குமார், தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *