• April 26, 2024

திருச்சி-இலங்கை விமான போக்குவரத்து குறைப்பு; கார்கோ சேவை ரத்து

 திருச்சி-இலங்கை விமான போக்குவரத்து குறைப்பு; கார்கோ சேவை ரத்து

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. முதலில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் தினசரி 2 சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கைக்கு காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோன்று மதியம் 2:30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்து மீண்டும் 3.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் சேவை என இரண்டு சேவைகளை வழங்கி வந்தது.
மேலும் 2 சேவைகளிலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 5 டன்கள் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலை காரணமாக இயக்கப்பட்டு வந்த இரு சேவைகளில் மதியம் இயக்கப்படும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களின் சேவையான கார்கோ சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ரத்து அறிவிப்பு முன்னறிவிப்பின்றி திடீரென நேற்று ஜூலை 1 முதல் அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்னிய செலாவணி பாதிக்கப்படுவதுடன் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஜூலை 1 தேதி முதல் மதிய நேர விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *