• April 20, 2024

கோவில்பட்டியில் தற்கொலை போராட்டம்: வக்கீல் உள்பட சிலர் கைது

 கோவில்பட்டியில் தற்கொலை போராட்டம்: வக்கீல் உள்பட சிலர் கைது

கோவில்பட்டி பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்களால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விருதுநகரை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தனது மனைவி பெயரில் கந்து வட்டி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து கந்துவட்டிக்கு தீர்வு காணக்கோரி காங்கிரஸ் கட்சியை சர்ந்த வக்கீல் அய்யலுசாமி இன்று தற்கொலை போராட்டம் அறிவித்து இருந்தார்.
இந்த போராட்டம் இன்று காலை 11 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் என்றும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி என்பவர் தற்கொலை செய்வார் என்றும் வக்கீல் அய்யலுசாமி அறிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலக நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்க்காக அவர்கள் தயார் நிலையில் இருந்தனர். இதை தெரிந்து கொண்ட அய்யலுசாமி மற்றும் மகேஸ்வரி உள்பட சிலர் மகளிர் காவல்நிலையம் எதிரே தீக்குளிப்பு முயற்ச்சியில் ஈடுபடுவதற்காக கூடினார்கள்.

சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதற்குள் போலீசார் ஓடி வந்து அந்த முயற்சியை முறியடித்தனர். பின்னர் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் சாலையில் படுத்துக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை குண்டுகட்டாக போலீஸ் நிலையத்துக்குள் தூக்கி சென்றனர். அவர் உள்பட மேலும் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கந்துவட்டி கொடுமை தொடர்பாக வக்கீல் அய்யலுசாமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் நாளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வினோபாலா செய்பவர் தற்கொலை செய்யப்போகிறார் என்றும், திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்டனி தற்கொலை செய்வார் என்றும் வக்கீல் அய்யலுசாமி அறிவித்து இருக்கிறார்,

செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனும் புதன் கிழமை தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் அலுவலகம் முன்பு 5-,ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனும் வெள்ளிக்கிழமை முதல்-அமைச்சர் இல்லம் முன்பு வக்கீல் அய்யலுசாமியும் தற்கொலை செய்ய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *