மேற்காசிய போரினால் தத்தளிக்கும் தீப்பெட்டி தொழில்: 12ம் தேதி முதல் 25ம் தேதி கதவடைப்பு போராட்டம்-ஆலை உரிமையாளர்கள் அறிவிப்பு
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:-மேற்கு ஆசிய நாடுகள் போர் நடப்பதனால் இதைக் காரணம் காட்டி இங்குள்ள தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு விலையை நாள்தோறும் உயர்த்தி இன்றைக்கு மூலப்பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலைக்குஉற்பத்தியாளர்கள் அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.
ஏற்கனவே சிகரெட் லைட்டர் விற்பனையால் GST ரிட்டன் கிடைக்காத தால் மூலதனம் முடக்கம் ஏற்பட்டு தீப்பெட்டித்தொழில் மிகவும் சிரமத்தில் உள்ளது தற்சமயம் போர் பதற்றத்தினால் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக ஏற்றுமதி தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை ஆண்டொன்றுக்கு உள்நாட்டு வணிகம் ரூ. 800 கோடிக்கும் பன்னாட்டு வணிகம். 600 கோடி ஆக 1400 கோடிரூபாய்க்கும் வணிகம் செய்து வருகின்றோம் இதில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றோம்.

தூத்துக்குடி விருதுநகர் தென்காசி தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் மாவட்டம் குடியாத்தம் போன்ற மாவட்டங்களில் முக்கிய தொழிலாக நூறு ஆண்டாக விளங்கி வருகிறது இந்த தொழில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. தற்போது வரை ஒரு ரூபாய்க்கு ஒரு தீப்பெட்டியை விற்கின்றோம்.20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ரூபாய்க்கு விற்ற பொருள்கள் இன்னைக்கு எத்தனை ரூபாய்க்கு விற்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் ஆனால் நாங்கள் 20 ஆண்டு காலமாக ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்று வருகிறோம்.
காரணம் தொழில் போட்டி பல்வேறு நெருக்கடி சைனா சிகரெட் லைட்டர் வருகை சைனா சிகரெட் லைட்டர் உதிரி பாகங்கள் வருகை.இப்பொழுது சைனா மிஷினை கொண்டு வந்து இந்தியாவிலேயே தயாரிக்கின்ற நிலைமை. இதனால் இந்தியாவில் தீப்பெட்டி விற்பனை மிகவும் குறைந்து விட்டது தீப்பெட்டி பண்டல்களுக்கு விலை கூட்ட முடியவில்லை பன்னாட்டு சந்தைக்கு தீப்பெட்டிகளின் கார்டுன்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
இந்த நிலைமையில் போரின் காரணம் காட்டி இயற்கையாகவும் செயற்கையாகவும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மூலப்பொருட்களின் விற்பனையாளர்கள் கடுமையான விலையேற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். உதாரணமாக ஒரு கிலோ மெழுகு 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சல்பர் ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு 81 ரூபாய்க்கு விற்கப்படுகிறது காகித அட்டை டுபிக்ஸ் கார் போர்டு அண்ட் பேப்பர் கிலோவுக்கு அஞ்சு ரூபாய் 50 காசு உயர்ந்து உள்ளது. பாஸ்பரஸ் கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் விற்கப்பட்டது. இது ரூபாய் கூடி உள்ளது தற்சமயம் பொட்டாசியம் குளோரைடு கிலோ ஒன்றுக்கு 108 ரூபாயிலிருந்து 118 ரூபாயாக உயர்ந்துள்ளது ஆக கிலோவுக்குபத்து ரூபாய் உயர்ந்துள்ளது ரோசனம் 118 இல் இருந்து 158 உயர்ந்துள்ளது ஆக கிலோ ஒன்றுக்கு 40ரூபாய் உயர்ந்துள்ளது பொட்டாசியம் டைகிராமெட் 276 இல் இருந்து 345 உயர்ந்துள்ளது ஆக கிலோ ஒன்றுக்கு 69 ரூபாய் கூடி உள்ளது கார்ட்டூன் பாக்ஸ் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் 50 காசு கூடி உள்ளது ஹண்டர்ஸ் பேக் பி பி மெட்டீரியல் 70 காசு இருந்து 93 பைசாவாக உயர்ந்துள்ளது ஆக 23 காசுகள் கூடியது பி ஓ பி பி ரீ ல் கிலோ 168 லிருந்து 250 ஆக கிலோ ஒன்றுக்கு 82 ரூபாய் கூடி உள்ளது கேரளா மட்டி குச்சி கிலோ ஒன்றுக்கு 48 லிருந்து இன்றைக்கு 55 ரூபாயாக உயர்ந்துள்ளது கிலோ ஒன்றுக்கு ஏழு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஈரான் ஈராக் போர் ஆரம்பித்த பிறகு வாங்கப்பட்ட பொருட்கள் எதுவுமே இன்னும் இந்தியா வந்து சேரவில்லை இதுவரையிலும் விற்கப்பட்ட விலை அனைத்தும் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மூலப்பொருட்கள் மொத்த வியாபாரிகள் செய்த கொடுமை.அதேபோல போர் நடக்கும் இடத்திற்கு சம்பந்தமில்லாத நாட்டில் இருந்து வரக்கூடிய மூலப்பொருட்களும் உள்நாட்டிலேயே தயாரிக்க கூடிய மூலப்பொருட்களும் விலையை உயர்த்தி இருக்கிறார்கள் இதை தெரிந்தும் நாங்கள் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் கேட்ட விலைக்கு பணத்தை கொடுத்து வாங்கி தொழில் செய்து வந்தோம் இன்றைக்கு தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்

எனவே மூலப் பொருட்கள் மொத்த வியாபாரிகள் எங்கள் நிலைமையை புரிந்து கொண்டு அதிகப்படியான லாபத்தை குறைத்துக் கொண்டு நியாயமான லாபத்தை பெறக்கூடிய மனநிலைக்கு வர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தும் அரசு அதிகாரிகள் இந்த செயற்கையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தி மூலப்பொருட்களை அதிகப்படியான விலைக்கு விற்கக்கூடிய மொத்த வியாபாரிகளை அழைத்து பதுக்கள் என்பது சட்டப்படி குற்றம் என்பதை உணர்த்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நியமான விலையில் மூலப்பொருட்கள் கிடைத்திட ஆவண செய்ய வேண்டி அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அவர்களை வற்புறுத்திட அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் வருகின்ற 12/4/2026 முதல் 25 4. 2026 வரை கவன ஈர்ப்பு கதவடைப்பு செய்வது என்ன கோவில்பட்டி சாத்தூர் சிவகாசி சங்கங்கள் கூடி முடிவெடுத்தது.
அதன்படி வருகிற 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனைத்து தொழிற்சாலைகளும் கதவடைப்பு செய்து கவன ஈர்ப்பு போராட்டம் செய்கிறோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.







