• March 18, 2026

ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகள் விவரம்

 ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகள் விவரம்

தமிழகத்தில் 6,600 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பராமரிப்பதற்காக, பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக, 2024-2025-ம் ஆண்டில் ரூ.4,300 கோடி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்திக்கொள்ள  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. குறைந்தது ரூ.10 முதல் கூடுதலாக ரூ.25 வரை கட்டணம் அதிகரிக்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள, கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட வாரியாக பார்க்கலாம்.

திருப்பத்தூர் – வாணியம்பாடி.

செங்கல்பட்டு – பரனூர், கருங்குழி.

விழுப்புரம் – மொரட்டாண்டி, ஆத்தூர், கெங்கராம்பாளையம், சேலியமேடு, நங்கிளி கொண்டான், தென்னமாதேவி.

திருவள்ளூர் – நல்லூர், எஸ்.வி.புரம், பட்டரைபெரும்புதூர்.

காஞ்சீபுரம் – ஸ்ரீபெரும்புதூர்.

சென்னை – மாத்தூர், சூரப்பட்டு, வானகரம்.

திருவண்ணாமலை – சென்னசமுத்திரம், கரியமங்கலம், இனம்கரியாந்தல்.

அரியலூர் – மணகெதி.

கிருஷ்ணகிரி – நாகம்பட்டி, கரகத்தஹள்ளி, கிருஷ்ணகிரி, கதவணி.

கடலூர் – கொத்தட்டை, பொன்னலகரம்.

கள்ளக்குறிச்சி – கீழ்குப்பம்.

வேலூர் – வல்லம், பள்ளிகொண்டா.

திருப்பூர் – வேலம்பட்டி, பொங்கலூர்.

கோவை – மதுக்கரை, கணியூர்.

தர்மபுரி – புதுப்பட்டி

திருச்சி – வாழவந்தான்கோட்டை, கல்லக்குடி.

விருதுநகர் – எட்டூர்வட்டம்.

தூத்துக்குடி – சாலைபுதூர், புதூர்பாண்டியபுரம்.

புதுக்கோட்டை – பூதக்குடி, லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, பழைய கந்தர்வகோட்டை.

சிவகங்கை – கோடிகோட்டை, செண்பகம்பேட்டை, திருபாச்சேத்தி.

ராமநாதபுரம் – வெண்ணாத்தூர், போகலூர்.

திருநெல்வேலி – நான்குநேரி, வாகைக்குளம்.

கன்னியாகுமரி – திருப்பதிசாரம்.

தேனி – உப்பார்பட்டி.

திருவாரூர் – கோவில்வேணி.

தஞ்சாவூர் – வேம்புகுடி, மாணம்பாடி.

மதுரை – சிட்டம்பட்டி, எலியார்பத்தி, கப்பலூர்.

திண்டுக்கல் – சத்திரபட்டி, புதூர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *