தூத்துக்குடியில் கடத்தி வரப்பட்ட 2000 கிலோ பீடி இலைகளுடன் சரக்கு வாகனம் பறிமுதல்
Oplus_16908288
தூத்துக்குடி தருவைக்குளம் போலீசார் நேற்று இரவு தருவைக்குளம் சமத்துவபுரம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த டிரைவர் போலீசாரை கண்டதும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார்

போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக சுமார் 2000 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் 240 கிலோ சிகரெட் பண்டல்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி கடத்திவரப்பட்ட பீடி இலை பண்டல்கள், சிகரெட் பண்டல்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இன்று (28.02.2026) சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.







