கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்


கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (5.5.2025) தொடங்கி 14.05.2025 வரை நடக்கிறது.
நாடார் உறவின்முறை சங்கத்தலைவர். பழனிச்செல்வம். கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து காலை 6.மணிக்கு மேல் 7.25 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கொடியேற்றம் முடிந்ததும் கொடி மரத்துக்கு பக்தர்கள் குடம் குடமாக பால் ஊற்றி வழிபட்டனர். மேலும் மஞ்சள் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் தண்ணீர் சுமந்து வந்து நிறைய பெண்கள் கொடிமரத்துக்கு ஊற்றி வழிபட்டனர்.
இன்று மாலை முதல்நாள் மண்டகப்படிதாரர்: நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள்.
இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிகுடையின் கீழ் அம்மன் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் எழுந்த்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது,
இரவு 7.25 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது. குறை ஒன்றுமில்லை என்ற தலைப்பில் சி.தேவி உரையாற்றுகிறார்.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் நெல்லை நாட்டாமையின் பாட்டுக்கச்சேரி நடைபெறும்.,

