பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கோவில்பட்டியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்விற்கு மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில செயலாளர் க தமிழரசன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் முத்து செல்வம், நாகராஜ், செண்பகராஜ், மாரியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழர் கட்சி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார். மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாமன்னர் பூலி தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் (எ) செல்லதுரை, தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி நல்லையா, மோகன். பகத்சிங் ரத்த தான கழக காளிதாஸ், லட்சுமணன். இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், மக்கள் நல அறக்கட்டளை மாரிமுத்து குமார், கணேஷ்குமார், ஜெகநாதன், மணிகண்டன், ககாரின். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம் , ஆசியா பார்ம் பாபு , வீராசாமி, நாராயணசாமி ,ஐ. என். டி. யூ. சி. ராஜசேகரன் , மகேந்திரன், பழனிசாமி , முருகன்.
காங்கிரஸ் கட்சி துரைராஜ். பிசியோதெரபி மருத்துவர் வினோதினி , சமூக நல ஆர்வலர்கள் செண்பகலட்சுமி, ராமலட்சுமி, சிவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


